மானாமதுரை அருகே வைகை ஆற்றில் மணல் திருட்டுல் ஈடுபட்ட  லாரிகள் கிராம பொதுமக்களால்  சிறைபிடிப்பு....

மானாமதுரை அருகே வைகை ஆற்றில் மணல் திருட்டுல் ஈடுபட்ட  லாரிகள் கிராம பொதுமக்களால்  சிறைபிடிப்பு....

September 28, 2019  kalai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது  தெ.புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுர மாவட்டம் சூடியூர் ஆகிய இரு கிராம எல்லைக்குட்பட்ட வைகை ஆற்றில் 24-09-3019 அன்று  அதிகாலை 3மணியளவில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை மறித்து தெ.புதுக்கோட்டை கிராமமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகை ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் குடிநீர் ஆதாரம் குறைந்து வருகிறது.இந்நிலையில் எல்லையோர கிராமங்களில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மானாமதுரை மூங்கில் ஊரணி. கல்மோடு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரின் பினாமிகள் பெயரில் உள்ள (TN.19L5666 உரிமையாளர் சுரேஷ்பாபு.) (TN 69AS 7977 .உரிமையாளர் மோகன் தாஸ்.)
(TN 63AP 9358 உரிமையாளர் சமயத்துரை. )(TN63BD3153 உரிமையாளர் அர்ச்சுனன்.)ஆகிய வாகனங்களில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனார். எல்லை பிரச்சனை காரணமாக சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்ட போலீசார் கண்டு கொள்ளாததால் அதிகாலை முதல் 5 மணி வரை மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். ராட்சத டாரஸ் லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே இடத்தில் பொதுப்பணித்துறை சார்பாக அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. கடும் எதிர்ப்பு காரணமாக மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்  மணல் குவாரியை ரத்து செய்து விட்டது. அதே இடத்தில் சிலர் சட்டவிரோதமாக திருட்டுமணல் அள்ளி வந்ததையடுத்து  அதிகாலை தெ.புதுக்கோட்டை கிராமமக்கள் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினர். மூன்று ராட்சத டாரஸ் லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பார்த்திபனுர் (ராமநாதபுரம் மாவட்டம்) , மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) போலீசார் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில்  கொண்டு சென்றனர்.பின்னர் லாரி யை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து தெ.புதுக்கோட்டை  கிராமபொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் தொடர்ந்து வைகை ஆற்றில்  மணல் திருட்டில்  ஈடுபட்டு வருகின்றவர்கள் மீது குண்டர் தடுப்பு  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் மற்றும்  லாரி உரிமையாளர்கள் மீதும் அதற்கு துணை பேகின்ற அரசு அதிகாரிகள்  மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசும் சிவகங்கை மாவட்ட நிர்வாகமும்  கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் பின்னர் காவல்துறை  உறுதியளித்தன் பேரில் கிராமமக்கள் முற்றுகை  போராட்டத்தை விலக்கி கொண்டனர்.