இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்ததான் தொடங்கியது என்பதை கீழடி உறுதி செய்துள்ளது. September 28, 2019
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்ததான் தொடங்கியது என்பதை கீழடி உறுதி செய்துள்ளது.

September 28, 2019 • Kalai


இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் கூறி இருந்த நிலையில்  இன்று தமிழ்நாட்டில் இருந்ததான் தொடங்கியது என்பதை கீழடி உறுதி செய்துள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியானது தமிழக தொல்லியல் துறை சார்பாக கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி 5வது கட்ட அகழ்வாராய்ச்சி பணியானது துவங்கப்பட்டது.  ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியை பொறுத்தமட்டில் 52 குழிகள் தோண்டப்பட்டது. 750 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற கட்டுமான சுவர்க்  போன்ற  அமைப்புகளின் தொடர்ச்சி இந்த ஆண்டு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.இந்நிலையில் இந்த பணியானது செப் மாத 30 ஆம் தேதியில் முடிவு பெரும் நிலையில் தற்போது இறுதி பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்.தொடர்ந்து அகழாய்வு பணிகள் குறித்த விவரங்களை தொல்லியல்துறை அதிகாரிகளிடன் தகவல்களை கேட்டறிந்தார். மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ பெரியசாமி உடன் கீழடி அகழாய்வு மையத்தை பார்வையிட்டனர்.மேலும் பொதுமக்கள் தத்தம் குடும்பத்தினருடனும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆவலுடன் கீழடி அகழாய்வு மையத்தை பார்வைஇட்டு வருகின்றனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

 

தமிழர்களுடைய வரலாற்றுப் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்க கூடிய இந்த கீழடி இங்கே இருப்பது பெருமையாக கருதுகிறேன் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இருக்கக்கூடிய பெருமையாக கீழடி விளங்கியுள்ளது. ஆகவே இந்த ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய அரசு நிர்வாகம் இது போன்ற தொல்லியல் ஆராய்ச்சி துறை தொடர வேண்டும்.இதனை மத்திய அரசு மாநில அரசு முழுமையாக ஈடுபடவேண்டும். ஆறாம் நூற்றாண்டிலேயே எவ்வாறாக இருந்திருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக தங்கம், இரும்பு ஓடுகளில் இருக்கக்கூடிய எழுத்துக்கள் இதெல்லாம் கொண்டிருக்கிறது என்பது பாராட்டுக்குரியது. உத்தர பிரதேசம், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய அகழாய்வு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க பட்டுள்ளது, அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

எனவே அதுபோல கீழடியும் பாதுகாக்கப்பட பகுதிகளாக அறிவித்து அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 4 தினங்களுக்கு முன்னதாக  கனிமொழி மற்றும் வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம் மூவரும் தமிழ் மக்களின் சார்பில் கீழடி குறித்து மத்திய அரசுக்கும் துறை ரீதியாக விளக்கமாக பேசியுள்ளார்கள்.குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆதிச்சநல்லூரில் 2004 ஆம் ஆண்டு ஆய்வு செய்தது,  அந்த பகுதியில் ஆய்வு செய்தது தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் கூறி இருந்த நிலையில்  இன்று தமிழ்நாட்டில் இருந்ததான் தொடங்கியது என்பதை கீழடி உறுதி செய்துள்ளது.எனவே நமது பண்பாடு கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்கு உடனடியாக மத்திய அரசு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாநில அரசும் முயன்ற அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.