தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

" alt="" aria-hidden="true" />


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது 


தர்மபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  மற்றும் விவசாயிகளுக்காக அரசு கொடுக்கும் மானியங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் கூட்டம் நடந்தது. இந்நிலையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு அறிந்தனர்.பின்பு தங்களது புகார்களை தெரியப்படுத்தினார். இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் விவசாய சங்கத்தை சார்ந்தவர்களும் விவசாய சங்கத்தின் தலைவர்களும்..இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் .விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பிரச்சினைகளையும், விவசாயிகளின் நிதி பிரச்சினைகளையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சிற்றூர்களில் விவசாய நிலங்களின் பராமரிப்பிற்கான மானியங்களையும் ஏரி, குளம் ,குட்டை போன்றவற்றை தூர்வாரும் திட்டங்களையும் இக்கூட்டத்தில் முறையிட்டனர். மற்றும் தங்களது பிரச்சினைகளை அரசு அலுவலகத்திற்கு கொண்டு சென்றோம் ஆனால் அவர்கள் அலட்சியப் போக்கையே எங்களது பிரச்சினைக்கு பதிலளிக்கிறார்கள் என்பதை இக்கூட்டத்தில் முறையிட்டனர். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நிலத்தை பராமரிப்பதற்காக அரசு உதவ வேண்டும் என்பதையும் இக்கூட்டத்தில் தெரியப்படுத்தினர்.